Nerul Bhaktha Samaj Banner

அருள்மிகு முருகப் பெருமான்

முருகன் பற்றி ஒரு அழகான கட்டுரை

சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனைப் பற்றிய வித்தியாசமான ஆய்வு ...

வாசித்து பாருங்கள் .... வியந்து போவீர்கள் .......

முருகனின் வரலாறு

ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள். தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு. வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூதஉடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

'சரம்' என்றால் மூச்சு. 'சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்' என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் 'சரவணன்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

முருகனின் சீடர்கள்

அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை. முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.

சுழுமுனை தத்துவம்

சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது ஆகும்.

ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன். இடகலை பிங்கலை என இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே.

முருகனின் தத்துவம்

முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன் ஊடாகவே உருவாக்குகிறான் உருவாக்கி கொண்டு இருக்கிறான் அதனாலே ஓசையனசத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்குகடவுள் முருகன் என்றார் .

எமது உடலில் இதயத்தில் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கிறது அது சத்தம் ஓசை முருகன் அந்த சத்தம் எமது இதையத்தில் இல்லை என்றால் உயிர் இறந்து விட்டது உயிர் இருந்தால் தான் படைப்பு உருவாகும் .

வேத நெறியை வாழ்விப்பவன் : தெய்வத்தின் குரல்

ஸ்கந்த மகாபுராணம்தான் புராணங்களுக்குள்ளேயே மிகப் பெரியது. ஏறக்குறைய ஒன்றரை லட்சம் சுலோகம் கொண்டது. உலகத்திலேயே இருப்பதற்குள் மிகப் பெரிய கிரந்தம் அதுதான் எனலாம்.

வேதத்துக்கு முக்கியம் வேள்வி, யாகம். வேள்விக்கு முக்கியம் அக்னி. தெய்வங்களுக்குள் சுப்ரம்மண்யர்தான் அக்னி ஸ்வரூபமானவர். அவருக்குப் பஞ்சபூத சம்பந்தமும் உண்டு.

!! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !!